உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா!

உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா!

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் உள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவிலில், இன்று குண்டம் விழா நடக்கிறது.மேட்டுப்பாளையம் சுதந்திராபுரத்தில், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் 31ம் ஆண்டு விழா, கடந்த மாதம் 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; 30ம் தேதி அம்மனுக்கு கம்பம் நடப்பட்டது. இக்கோவிலில் முதன் முறையாக இந்தாண்டு குண்டம் விழா நடைபெறுகிறது. அதனால் கோவில் முன்பு 16 அடி நீளத்தில் புதிதாக குழி வெட்டப்பட்டது. செம்மண் பூச்சு பூசி குண்டம் அமைக்கப்பட்டது. கோவை பீளமேடு வித்யா ஞான மடம் அரங்கநாத சுவாமிகள் தலைமையில் காலை 6.00 மணிக்கு குண்டம் விழா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து மாவிளக்கு திருவிழாவும், 9ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 10ல் மஞ்சள் நீராட்டும், 14ல் மறுபூஜையும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !