உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை!

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை!

ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு 33 லட்சத்து 39 ஆயிரத்து 360 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் முதல்வாரத்தில் உண்டியல்கள் எண்ணப்படுகின்றன.நேற்றுமுன்தினம், நடந்த உண்டியல் எண்ணிக்கையில் நிரந்தர பொது உண்டியல்களில் 25 லட்சத்து 83 ஆயிரத்து 473 ரூபாயும், 181 கிராம் தங்கமும், 158 கிராம் வெள்ளியும் கிடைத்தது. தட்டுக்காணிக்கை உண்டியலில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 887 ரூபாயும், மொத்தம் 33 லட்சத்து 39 ஆயிரத்து 360 ரூபாய் இந்த மாதம் வருமானமாக கிடைத்தது.இப்பணியை கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன், வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் அனிதா, கண்காணிப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், சேகர், பொள்ளாச்சி ஆய்வாளர் தமிழ்வாணன் மற்றும் கோவில் பணியாளர்கள் கவனித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !