உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி திருவிழா தொடங்கியது: பக்தர்கள் நேர்த்திக்கடன்!

வீரபாண்டி திருவிழா தொடங்கியது: பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழாவில், பல்லாயிரம் பக்தர்கள் அக்னி சட்டிகளுடன் குவிந்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் முக்கிய நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. காலையில் கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு திருவாபரண பெட்டி கொண்டு வரப்பட்டது. இரவு 11 மணிக்கு மண்டகப்படி பூஜைகள் நடந்தன. நேற்று காலை முதல் பல்லாயிரம் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், வேல்குத்தியும், சேத்தாண்டி வேடமிட்டும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயிலுக்கு வந்த பக்தர்கள், முல்லை பெரியாற்றில் குளித்து விட்டு தண்ணீர் எடுத்து வந்து, கோயில் முக்கொம்புக்கு ஊற்றி வழிபட்டனர்.கோயில் விழாவை ஒட்டி பிரமாண்டமான பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொருட்காட்சி அரங்குகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. விழா கடைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !