உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டிவருண ஜெபவேள்வி

மழை வேண்டிவருண ஜெபவேள்வி

சுல்தான்பேட்டை: கம்மாளப்பட்டி பொதுமக்கள், மழை வேண்டி, மாரியம்மன் கோவிலில் 108 கலசங்கள் வைத்து வருண ஜெப வேள்வி நடத்தினர். சுல்தான்பேட்டை ஒன்றியம், கம்மாளப்பட்டி ஊராட்சியில், 5,000 பேர் வசிக்கின்றனர்.இங்கு, தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மூன்று ஆண்டுகளாக மழை பெய்யாததால், பல இடங்களில் வறட்சியால் தென்னை மரங்கள் கருகின. ஊர் பொதுமக்கள், போதிய குடிநீர் கிடைக்காமல், அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் ஒன்று கூடி, மழை வேண்டி நேற்று கம்மாளப்பட்டி மாரியம்மன் கோவிலில் 108 கலசங்களில், வருண ஜெப வேள்வி நடத்தினர். வேள்வியில் 108 திரவியங்கள் இடப்பட்டன. வேள்வி நிறைவுக்குபின், கலசங்களில் உள்ள நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. வேள்வி நடத்திய நடராஜ் சிவாச்சாரியர் கூறுகையில், ""மழை வேண்டி வருண ஜெபம் செய்தால், பகவான் மனம் குளிர்ந்து நிச்சயம் விரைவில் மழை பொழியச் செய்வார் என்பது ஐதீகம். வருண பகவானை மனமார நினைத்து 108 கலச வழிபாடு, 108 திரவியங்களால் ஜெபம் செய்துள்ளதால், மழை பெய்யும்; வறட்சி நீங்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !