எடையூர் சீனிவாச பெருமாள் கோயிலை புனரமைக்க கோரிக்கை!
திருக்கழுக்குன்றம்:எடையூர் சீனிவாசப் பெருமாள் கோயில், போதிய பராமரிப்பின்றி, சீரழிந்து வருவதால், புனரமைத்து, வழிபாடு நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில், சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கி.பி.7ம் நூற்றாண்டில், காஞ்சிபுரத்தை ஆண்ட முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், ஆட்சிபுரிந்த குறுநில மன்னரால், அழகிய கலைநயத்துடன் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.கல்வெட்டில் ஆதாரம்இதற்கான ஆதாரம், கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாணக்கிய மன்னர் காலத்தில், இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.கோயில் கருவறையில், சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுயம்பு வடிவாக காட்சியளிக்கிறார். கருவறையின் வெளியே, அர்த்த மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தின் தூண்களில், அழகிய சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதில், கருடன், சக்கரம், சங்கு, வராகம், மச்சம் மற்றும் கிரகணம் போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோயிலின் எதிரே, ஒரே கருங்கல்லால் செய்யப்பட்டுள்ள ஜெயஸ்தம்பம் உள்ளது.சீரழிவுமன்னர்கள், போர் வென்ற நாட்டின் பெயர்களை, கோயில்களில் திருப்பணி நடத்தி, தங்களின் அடையாளச் சின்னமாக, ஜெயஸ்தம்பத்தை (தூண்) அமைத்துள்ளனர்.பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோயில், தற்போது, போதிய பராமரிப்பின்றி, சீரழிந்து வருகிறது. இதை, புனரமைத்து, தினசரி வழிபாடு நடத்த, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.