உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மகா துர்க்கா கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மகா துர்க்கா கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் வேதாத்திரிநகர் ஸ்ரீ மகா துர்க்கா கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.நேற்று காலை 5 மணிக்கு திருபள்ளியெழுச்சி, யாகசாலை துவக்கம்,கோமாதா பூஜை, கலச பூஜை, நான்காம் கால யாக வேள்வி துவக்க நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 6.30 மணிக்குஅனைத்து அக்னி குண்டங்கள் வேள்வி நிறைவு, கலசங்கள் புறப்பாடு, குருமார்கள் மரியாதை, கோள்கள் பீர்த்திதானத்திற்கு பின் கும்பாபிஷேகம் நடந்தது. கன்னை ஸ்ரீராமன் பட்டாச்சார்யார் நடத்தி வைத்தார்.டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம், உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்கேஎம் மயிலானந்தன், நகராட்சி தலைவர் மருதராஜ், வர்த்தக சங்க தலைவர் குப்புச்சாமி, துணை தலைவர் ஜி.சுந்தரராஜன், பி.ஆர்.ஓ., முருகேசன், பி.எஸ். என்.ஏ., பொறியியல் கல்லூரி இயக்குனர் ரகுராமன், அறிவுத்திருக்கோயில் செயலாளர் பழனிச்சாமி, வாசவி ஜூவல்லரி மார்ட் லதா, மதுரா ஸ்டீல்ஸ் இயக்குனர் ராமலிங்கம், அண்ணாமலையார் மில்ஸ் நிர்வாக இயக்குனர் சக்கேத்து ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார், ஒன்றிய தலைவர் கமலாதேவி, ஊராட்சி தலைவர் மாதவன், பி.வி.கே. மஹால் உரிமையாளர் பெருமாள், டாக்டர் அமலாதேவி உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேராசிரியை சரஸ்வதி ராமநாதன் நேர்முக வர்ணனையாற்றினார். அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அன்புநெறி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எம்.கே. தாமோதரன், செயலாளர் நளினி தலைமையில் துர்க் கா பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !