திருப்பாச்சூர் வாசீஸ்வரசுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா 15ம் தேதி துவக்கம்
கடம்பத்தூர்:பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர் கிராமத்தில் உள்ள தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நாளை, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 15 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.இந்த கோவில் பிரம்மா, சந்திரன், பிரிங்கி முனிவர், அகத்தியர், வசிஸ்டர், நாரதர், மார்க்கண்டேயர், விஸ்வாமித்திரர் ஆகியோர் வழிபட்டு சிறப்பு பெற்றதும், திருஞான சம்பந்தர் சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய நாயன்மார்கள் பாடல் பெற்றதும் ஆகும். காணுதற்குரிய அற்புத விநாயகர் சபை தொண்டை வளநாட்டில் பாடல் பெற்ற, 32 சிவத்தலங்களில் 16வது தலமாக விளங்குகிறது.விழா நடைபெறும் நாட்களில், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர், தக்கார் உட்பட பலர் செய்து வருகின்றனர்.