வரதராஜபெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்
ADDED :4629 days ago
மேட்டூர்: மேட்டூர் கணேச ஆஞ்சநேய வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டூர் கணேச ஆஞ்சநேய வரதராஜ பெருமாள் கோவில், 88ம் ஆண்டு ராமநவமி விழா கடந்த மாதம் 11ம் தேதி துவங்கியது. கடந்த ஒரு மாதமாக சீதாகல்யாண வைபவம், ஆஞ்சநேய உத்சவம், குத்துவிளக்கு பூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.விழா இறுதிநாளான நேற்று கோவில் வளாகத்தில் கல்வி மேன்னை, லட்சுமி கடாக்ஷம், சகல ஐஸ்வர்யங்கள் தரும் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மேட்டூர் பஜனை ஸாமஜத்தினர் செய்தனர்.