செண்பக தியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருளல்
ADDED :4550 days ago
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் செண்பக தியாகராஜர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். காரைக்கால் திருநள்ளாரில் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை விநாயகர் உற்சவம், 11 மற்றும் 12ம் தேதி சுப்ரமணியர் உற்சவம், கடந்த 14ம் தேதி இரவு அடியார் நால்வர் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு செண்பக தியாகராஜர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை 11.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட செண்பக தியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதா ஸ்தானத்திற்கு எழுந்தருளினார்.