மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் பாதுகாக்க மனு
ADDED :4610 days ago
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோபுரங்களில் இருந்து 50 அடி தூரத்தில் தங்கும் விடுதிகள் உள்ளன.இங்கிருந்து பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்றும், எனவே கோபுர உச்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் எனவும், போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் முத்துகுமார் தலைமையில் வக்கீல்கள் மனு அளித்தனர். இதுகுறித்து பரிசீலிப்பதாக கமிஷனர் தெரிவித்தார். வக்கீல்கள் மோகன்தாஸ், உத்தமன், கேசவன் உடனிருந்தனர்.