மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4491 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4491 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4491 days ago
உளுந்தூர்பேட்டை:பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் வரும் 22ம் தேதி பிரம்மோற்சவத்துடன் விழா துவங்குகிறது. உளுந்தூர்பேட்டை அடுத்த பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவம் வரும் 21ம் தேதி இரவு 9 மணிக்கு தனுசு லக்கினத்தில் அங்குரார்பணமும், 22ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. 23ம் தேதி காலை 11 மணிக்கு நரசிம்மர் ஜெயந்தி மற்றும் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ அபிஷேகம், ஸ்ரீரங்கத்தில் இருந்து தருவிக்கப்பட்ட வாசன புஷ்பங்களை கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. 24ம் தேதி காலை 9 மணிக்கு காஞ்சி கருட சேவையும், 24ம் தேதி இரவு 9 மணிக்கு அனுமந்த வாகனம், 25ம் தேதி இரவு 9 மணிக்கு நாக வாகனம், 26ம் இரவு 9 மணிக்கு உபய கருட சேவை நடக்கிறது.27ம் தேதி காலை 10 மணிக்கு லட்சுமி நரசிம்மருக்கும்-கனகவள்ளி தாயாருக்கும் விசேஷ திருக்கல்யாணம் நடக்கிறது. அன்றிரவு 9 மணிக்கு யானை வாகனம், 28ம் தேதி இரவு 9 மணிக்கு சோமசூரிய பிரபை வாகனம், 29ம் தேதி இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது.30ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் தேர் திருவிழா நடக்கிறது. திருத்தேரினை குமரகுரு எம்.எல்.ஏ., வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். 1ம் தேதி தெப்ப உற்சவத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி தினசரி வேதபாராயணம், பஜனைகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக் கிறது. பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆலய அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
4491 days ago
4491 days ago
4491 days ago