உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏர்வாடி தர்காவில் தங்க அடையாள அட்டை!

ஏர்வாடி தர்காவில் தங்க அடையாள அட்டை!

கீழக்கரை: ஏர்வாடி தர்காவில், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், மூன்று நாட்களுக்கு மேல் தங்கும் யாத்ரீகர்களுக்கு, அடையாள அட்டை வழங்க, ஹக்தார் கமிட்டி முடிவு செய்துள்ளது.தர்கா ஹக்தார்கள் கமிட்டி தலைவர் (பொறுப்பு) சிராஜ்தீன் கூறியதாவது: தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால், சமூக விரோதிகளை அடையாளம் காண முடியவில்லை. தர்கா வளாகத்தில், மூன்று நாட்களுக்கு அதிகமாக தங்கும் பக்தர்களின் ரேஷன் கார்டு மற்றும், வாக்காளர் அடையாள அட்டை சான்றாக பெற்று, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையும் வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலமாக சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியும். தர்காவில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் கூடுதல் பாதுகாவலர்கள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !