உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!

காளஹஸ்தி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்!

நகரி: காளஹஸ்தி பெருமாள் கோவிலில், இன்று (21ம் தேதி) கொடியேற்றத்துடன், பிரம்மோற்சவம் துவங்குகிறது.காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வரர் கோவில் சார்பில், செயல்பட்டு வரும், வரதராஜ சுவாமி கோவிலில், பிரம்மோற்சவம் விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வரும், 25ம் தேதியன்று கருட வாகனமும், 26ம் தேதியன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக, வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.இத்தகவலை, கோவிலின் நிர்வாக அதிகாரி ராமச்சந்திர மூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !