பொள்ளாச்சி பாலதண்டாயுதபாணி கோவிலில் 23ல் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி எஸ்.நல்லூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும் 23ம் தேதி மகாகும்பாபிஷேக விழா நடக்கிறது. பொள்ளாச்சி அடுத்த எஸ்.நல்லூரில் மகாகணபதி, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை (22ம் தேதி) மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. இதை தொடர்ந்து புண்யாகவாஸனம், பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்ஸங்கிரணம், அங்குரார்ப்பணம், ரஷா பந்தனம், கடஸ்தாபனம் நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை 5.00 மணிக்கு வேதிகா பூஜை, இரண்டாம் கால வேள்வி, வேத, சிவாகம, திருமுறை பாராயணம், நாடிசந்தானம், நிறை வேள்வி மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 8.10 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு 8.30 முதல் 9.15 மணி வரை விநாயகர், பால தண்டாயுதபாணி சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து பக்தர்களுக்கு 10.00 மணிக்கு மேல் அன்னதானம் நடக்கிறது. விழாவில், பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.