உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சேலம்: சேலம், லீபஜார் வர்த்தகர் சங்கத்துக்கு சொந்தமான செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சேலம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள காளியம்மன், விநாயகர், வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கடந்த, 19ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. 21ம் தேதி, நான்காம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 6.30 மணிக்கு விநாயகர், காளியம்மன், வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானம் அர்ச்சகர் ஹாலாஸ்யநாத சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பெருந்துறை கார்த்திகேய சிவம், காளிதாஸ், சிவக்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் விழாவில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !