ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4555 days ago
ஆத்தூர்: ஆத்தூர், ராகவேந்திரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆத்தூர் நகராட்சி, 27வது வார்டு, டாக்டர் வரதராஜிலு தெருவில், ராகவேந்திரருக்கு, புதிதாக கோவில் கட்டப்பட்டது. இங்கு, விநாயகர், ராகவேந்திரர், நாராயணன், மாஞ்சாலியம்மன், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராமானுஜர், நவநீதகிருஷ்ணன், சிவகாமி அம்மாள் உள்ளிட்ட சிலைகள் வடிமைக்கப்பட்டது. அதையடுத்து, கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று, காலை, 6.30 மணியளவில், இரண்டாம் கால பூஜை, தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி, த்ரவ்யாஹுதி, மகாபூர்ணாஹுதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 10 மணியளவில், ராகவேந்திரர் உள்ளிட்ட ஸ்வாமிகளுக்கு, கும்பாபிஷேக விழா நடந்தது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.