உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

பத்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

புதுச்சேரி: காளத்தீஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோவிலின், பத்தாம் ஆண்டு கும்பாபிஷே விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, யாகசாலை அமைக்கப்பட்டு, பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. ஞானாம்பிகா சமேத காளத்தீஸ்வர சுவாமிக்கு, 108 சங்காபிஷேகமும், மகா தீபாராதனையும் நேற்று காலை நடந்தது. ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்கு, மகாசாந்தி கட திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, பஞ்சமூர்த்திகள், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் வீதியுலா உற்சவம் மாலையில் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு நிர்வாகிகள் குணசேகரன், சாம்பசிவம், கந்தசாமி, பாஸ்கரன், மகாராஜன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !