சந்தனமாரியம்மன் கும்பாபிஷேகம்
ADDED :4540 days ago
கமுதி: கமுதி அருகே நீராவியில் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் கடம்புறப்பாடு நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க காலை 10.30 மணிக்கு கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. கமுதி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.