சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம்
ADDED :4550 days ago
காஞ்சிபுரம்: குமரகோட்டம், சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம், மேற்கு ராஜவீதியில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகப் பெருவிழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, பல்லக்கு உற்சவமும், இரவு, மாவடி சேவை உற்சவமும் நடந்தது. நேற்று, பிரபல உற்சவமான, விசாக உற்சவம் நடந்தது. காலை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இரவு, கேடயம் மங்களகிரி உற்சவம் நடைபெற்றது. இன்று காலை, வள்ளியம்மையார் திருக்கல்யாண உற்சவமும், இரவு, சூரன் மயில்வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.