உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்

பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு ஹோமம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு குருஹோமம்நேற்று நடந்தது.நாளை ரிஷப ராசியிலிருந்து, மிதுன ராசிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது.குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குரு தலமான பட்டமங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரரேஷ்வரர் கோயில், அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சன்னதி எதிரில், உற்சவர் முன்பாக, ரிஷிகள்,கார்த்திகை பெண்கள் எழுந்தருளியுள்ள இடத்தில் ஹோமம் நடந்தது. 9 கலசங்களில் புனித நீர் வைத்து,சிவாச்சார்யார்களால் சிறப்பு குரு ஹோமம் நடந்தது.ஹோமத்தில் பக்தர்களின் காணிக்கையும் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடந்து, வெள்ளி அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நாளை (மே28) அதிகாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. குருப்பெயர்ச்சி நடக்கும் மாலை 6.45 மணிக்கும் இரவு 9.03 மணிக்கும் ராஜகோபுரத்திற்கு தீபாராதனை நடைபெற்று,ஹோமத்தில் வைக்கப்பட்ட புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !