உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா!

பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா!

பழநி: பழநி, பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயில் முத்துகுமாரசுவாமி மண்டபத்தில் காலை 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சிவன் பார்வதியும், திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள் கோயிலை வலம் வந்தனர். சிவன், பார்வதி, திருஞானசம்பந்தருக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் தீபாராதனை செய்து, அம்பாள் இடமிருந்து, பொற்கிண்ணத்தில் ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல் செய்திருந்தனர். வள்ளுவர் தியேட்டர் நடராஜ்,செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !