உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவிலில்மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா

பத்ரகாளியம்மன் கோவிலில்மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா

காரைக்கால்: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப்பெருவிழா நடந்தது.காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா கடந்த 8ம் தேதி பூர்வாங்க அபிஷேக ஆராதனைகள் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் தினம் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. அதைத் தொடர்ந்து, இரவு மகிஷ சம்ஹார நினைவு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (29ம் தேதி) இரவு எல்லை ஓடுதல், நாளை (30ம் தேதி) இரவு அம்மன் திருத்தேர் வீதியுலா, வரும் ஜூன் 4ம் தேதி உதிரவாய் உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன் வீராசாமி உட்படபலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !