உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் திருப்பணிக்கு ரூ.2.10 லட்சம் நிதியுதவி

கோவில் திருப்பணிக்கு ரூ.2.10 லட்சம் நிதியுதவி

புதுச்சேரி: சிவலிங்கபுரம் சிவன்கோவில் திருப்பணிக்கு 2.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.மணவெளி தொகுதி, சிவலிங்கபுரம் சிவன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. கோவில் திருப்பணிக்கு தி.மு.க., தொகுதி செயலாளர் செல்வம், 2.10 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். கோவில் அறங்காவல் குழுவினர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி தி.மு.க., செயலாளர் சிவபாலன், லோகு, தண்டபாணி, தட்சணாமூர்த்தி, ராஜகுரு, கலைவாணன், கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !