உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்

தென்காசி: தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. தென்காசி ஆணைப்பாலம் அருகேயுள்ள பொருந்தி நின்ற பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது.திருவிழா நாட்களில் மாலையில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் வீதிஉலா நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாள் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை தக்கார் வெங்கடேஷ், செயல் அலுவலர் கணபதி முருகன், கட்டளைதாரர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !