வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா!
ADDED :4530 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடந்தது. குருபகவான் மிருகசீரிஷம் 2ம் பாதம் ரிஷப ராசியிலிருந்து, மிருகசீரிஷம் 3ம் பாதமான மிதுன ராசிக்கு பெயர்ச்சியானார். இதையொட்டி காலையில் நவக்கிரஹ சன்னதியில் உள்ள குருபகவானுக்கும், தட்ஷிணாமூர்த்திக்கும் 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்களின் சிறப்பு பஜனைக்கு பின்னர் பூரண கும்பம் வைத்து யாகபூஜைகள் நடந்தது. குருப்பெயர்ச்சியால் பலன் பெற்ற ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கும், பாதகம் உள்ள ராசிக்காரர்களான மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ராசிக்காரர்களுக்கும் தனித்தனியே அர்ச்சனை பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தாங்கள் ராசிக்கு பரிகார அர்ச்சனை செய்து வழிபட்டனர்.