எல்லை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ADDED :4530 days ago
ராசிபுரம்: ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கோலாகலமாக நடந்தது. ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில், பாலமுருகன் கோவிலின் பொங்கல் விழா, கடந்த, 20ம் தேதி, கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, பூஜை நடந்தது. அதையடுத்து, நேற்று காலை, தீமிதி திருவிழா நடந்தது. ராசிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீக்குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.