மங்கையர்க்கரசியார்
ADDED :5404 days ago
மங்கையர்க்கரசியார் சோழ மன்னருடைய அன்புடைச் செல்வியராய்ப் பிறந்து பாண்டிய மன்னரது பட்டத்து அரசியானார். இவரது இயற்பெயர் மானி என்பதாகும். மங்கையர்க்கெல்லாம் தலைவியான பேறு பெற்றதால் மங்கையர்க்கரசி என்று சிறப்புப் பெயர் பெற்றாள். இளமை முதற்கொண்டே எம்பெருமானின் திருவடிகளில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்த அம்மையார் பாண்டிய நாட்டில் பரவி வந்த சமணக் கொள்கையை ஒழித்துக்கட்ட அரிய தொண்டாற்றினாள். திருஞானசம்பந்தரைத் தமது நாட்டிற்கு அழைத்து வந்து, சமணத்தைப் பின்பற்றி வந்த கணவரான பாண்டியன் நின்றசீர் நெடுமாற நாயனாருக்கு மன மாற்றம் ஏற்படுத்தி சைவராக மாற்றினாள். இவ்வாறு மங்கையர்க்கரசியார், சைவத்திற்கும், சைவக் கொள்கைக்கும் ஆற்றிய அருந்தொண்டினை, சேக்கிழார் சுவாமிகள் வெகுவாகப் புகழ்ந்து சிறப்பித்துள்ளார்.
குருபூஜை
: மங்கையர்க்கரசியாரின் குருபூஜை சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.வரிவளையால்மானிக்கும் அடியேன்.