உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேதமடைந்த மனுநீதி சோழன் கல்தேர்: புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சேதமடைந்த மனுநீதி சோழன் கல்தேர்: புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திருவாரூர்: திருவாரூர் கோவில் வளாகத்தில், பராமரிப்பின்றி பாழாகி வரும், மன்னன் மனுநீதி சோழன் கல்தேர் வளாகம் மற்றும் சேதமடைந்துள்ள சிலைகளை சீரமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தியாகராஜர் கோவில், மூன்றாம் பிரகார வெளிப்புற வீதியில், மனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் (பரிய விருத்தன்), தேர் சக்கரத்தில் சிக்கி கிடப்பது, கல் தேருக்கு சற்று தொலைவில், ஒரு சிறிய மண்டபத்தில், ஒரு மணி, கதறிய நிலையில் பசு நிற்பது, இறந்த நிலையில் கன்று கிடப்பது, மன்னன் மனுநீதி சோழன், நீதி வழங்கிய விதம் போன்ற காட்சிகளுடன் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இது, வராற்றைம் கூறும், கலை பொக்கிஷமாகத் திகழ்கிறது. இந்த சிற்பத்தை, மாணவர்கள், உள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்த்து, வரலாற்றை தெரிந்து வந்தனர். தற்போது, சிலைகள் உடைந்து, பராமரிப்பு இல்லாமல் வளாகம் புதர் மண்டி, மாட்டுத் தொழுவமாக உள்ளது. திருவாரூரில், மனுநீதி சோழனுக்கு மணி மண்டபம் அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மணிமண்டபம் கட்டும் இடம் குறித்து, அண்மையில் மூன்று அமைச்சர்கள், ஆய்வு செய்தனர். சேதமடைந்துள்ள கல்தேரையும் பார்த்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுநீதி சோழனின், கல்தேர் வளாகத்தை புதுப்பிப்பதுடன், பராமரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !