உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலவசமா தண்ணி!

இலவசமா தண்ணி!

தர்மசாஸ்திரம் அறிந்த பண்டிதர் ஒருவர் பசி தாளமுடியாமல் வெயிலில் நடந்து சென்றார். வழியில் ஒருவர், இலவச சுண்டல் வழங்கிக் கொண்டிருந்தார். பசியிலிருந்த பண்டிதர் சுண்டலைப் பெற்று அவசர அவசரமாக சாப்பிட்டதில் விக்கல் வந்துவிட்டது.  சுண்டல் கொடுத்தவர் பண்டிதரிடம், கொஞ்சம் பொறுங்க! தண்ணி கொண்டு வர்றேன் என்றார். பண்டிதரோ அவரிடம், வேண்டாம் வேண்டாம்! உங்க வேலையைத் தொடருங்க! ஒரு கைக்கு இரண்டு கையா சுண்டல் தந்ததே போதுங்க. குளத்திலே போய் தண்ணீர் குடிக்கிறேன், என்று சொல்லி நடையைக் கட்டினார்.  இதைப் பார்த்த ஒருவர் பண்டிதரிடம், அவர் தண்ணீர் கொடுத்தும் ஏன் குடிக்கலே என்று கேட்டார். அதற்கு பண்டிதர், சுண்டல் சாப்பிட்டதும் பசி அடங்கிவிட்டது. தெம்பாக இருக்கிற நான் குளத்தைத் தேடிப் போவதில் தவறில்லை. எனக்கு வேண்டியதை உழைத்துத் தேடுவதுதான் நியாயம். அளவுக்கு அதிகமாக மற்றவர்களிடம் தானம் வாங்குவது கூடாது என்று சொல்லி புறப்பட்டார். இந்தக் கதையைச் சொன்ன வாரியார், இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக அளவுக்கு அதிகமாக எதையும் பயன்படுத்தக் கூடாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !