உலக அமைதி வேண்டி நவசண்டி யாக பூஜை
ADDED :4503 days ago
சேலம்: சேலத்தில், உலக அமைதி வேண்டியும், மழை வேண்டியும் நவசண்டி யாக பூஜை நடந்தது. உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும், தண்ணீர் குறை தீரவும், மழை வேண்டியும் சேலம், அம்மாபேட்டை, சிவகாமி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் நடசண்டியாகம் நடந்தது. ஸ்ரீமகாமேரு தேவி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கொடுத்த, பல்வேறு வகையான தானியங்களை கொண்டு நவசண்டியாக பூஜை நடந்தது. முன்னதாக, பூர்வாங்க பூஜை, சண்டி நவாவரண பூஜை பாராயணம், சுவாசினி பூஜை, பூர்ணாகுதி, பலி விதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. உத்தமசோழபுரம் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், பழனி பிரபாகரன் ஆகியோர் நவசண்டியாக பூஜையை நடத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் நவசண்டி யாக பூஜையில் கலந்து கொண்டனர்.