உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோயில் விழா

மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோயில் விழா

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அருகே விராலிபட்டி கிழக்கு தெருவில் அமைந்துள்ளது மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோயில்கள். இங்கு கடந்த ஜூன் 4ல் சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இதையடுத்து கரகம் பாலித்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிசட்டி, பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திகடன்கள் செலுத்தப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !