நெல்லை கைலாசபுரம் விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :4533 days ago
திருநெல்வேலி: நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் சித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், ருத்ர ஜபம், வேத மந்திரம் முழங்க கோயிலின் கலசத்திற்கும், விநாயகப் பெருமானுக்கும், வாசனை திரவியங்களுடன் அனைத்து வகை அபிஷேகத்திற்கும் செய்யப்பட்டது. வருஷாபிஷேகத்தை சிவக்குமார் நடத்திவைத்தார். தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில செயலாளர் கயிலை கண்ணன், ராமசந்திரராவ், வெங்கடாச்சலம், மணி முதலியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.