ரிஷிவந்தியம் சிவன் கோவிலில் பிரமோற்சவம் துவக்கம்
ADDED :4532 days ago
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ரிஷிவந்தியத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (14ம்தேதி) துவங்கவுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு பஞ்சமி திதியில் பலிபீடம் முன்பு உள்ள மரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி திருவீதியுலாவும், விஷேசபூஜைகளும் நடக்கிறது. வரும் 22ம் தேதி 9ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.