மன்னாதீஸ்வரர் கோவிலில் ராஜகோபுர திருப்பணி துவக்கம்
ADDED :4598 days ago
கிருமாம்பாக்கம்: கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் கோவில் ராஜகோபுர திருப்பணியை, முதல்வர் ரங்கசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் கோவில், பச்சைவாழியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் மகாமண்டபங்கள், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணிய சுவாமி கோவில் திருப்பணி துவக்க விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி, ராஜகோபுர பணியை துவக்கி வைத்தார். அமைச்சர்கள் தியாகராஜன், ராஜவேலு முன்னிலை வகித்தனர்.இந்து அறநிலையத் துறை ஆணையர் வரதராஜன், மன்னாதீஸ்வரர் ஆலய நிர்வாகக் குழு தலைவர் தணிகாசலம், துணைத் தலைவர் தனஞ்செயன், செயலாளர் தனசேகரன், பொருளாளர் தனசேகரன், உறுப்பினர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.