சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் அவதி
ADDED :4532 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில், குடிநீர் போன்ற அடிப்படை வசதியின்றி, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். இக்கோயிலில் வைகாசி திருவிழா நடக்கிறது. கோயில் கிணற்றில் குளித்து, காப்பு கட்டுதல், சந்தனம் பூசுதல், பொங்கல் வைத்து நேர்த்தக்கடன் செலுத்துதல் போன்வற்றில் பக்தர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது கோயில் கிணறு அருகே தொட்டியில் தண்ணீர் நிரப்பவில்லை; குடிநீர் இல்லை; "மினரல் வாட்டர் கேன் வாங்கி, பக்தர்கள் குளிக்கின்றனர். பெண்கள் உடை மாற்ற வசதியில்லை. கோயில் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பக்தர்களின் நலன்கருதி, உடனடியாக அடிப்படை வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.