உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி தொடக்கம்

காரைக்குடியில் திருவையாறு இசை நிகழ்ச்சி தொடக்கம்

காரைக்குடி: இளம் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், காரைக்குடி மியூசிக் அகாடமி சார்பில், "காரைக்குடியில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி, இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. திருச்சி ஷேக் மெகபூப் சுபாமி, மெஹ்பூர் குழுவினரின், நாதஸ்வர மங்கள இசையும், காரைக்குடி கோபாலகிருஷ்ணனின் இன்னிசை கச்சேரியும், பின்னணி பாடகி மகதி குழுவினரின், இன்னிசை கச்சேரியும் இடம் பெறுகிறது. நாளை காலை 10 மணிக்கு, பெங்களூரு செல்வநாராயணனின் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளுடன், தியாகராஜ சுவாமிகள் ஆராதனை நடக்கிறது; இசைக்கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, அரவிந்த் குழுவினர், கடலூர் ஜனனி, காரைக்குடி ஐஸ்வர்யா, இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு விழாவில், இரவு 7 மணிக்கு, சிக்கில் குருசரண் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடக்கிறது. இசை விமர்சகர் சங்கரசேதுவுக்கு, "இசைக்கலா ரசிகமணி விருது வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !