உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூய பதுவை அந்தோணியார் தேர்ப்பவனி

தூய பதுவை அந்தோணியார் தேர்ப்பவனி

பரமக்குடி: பரமக்குடி அருகே காட்டுப்பரமக்குடி தூய பதுவை அந்தோணியார் தேர்ப்பவனி விழா, நேற்று முன்தினம் இரவு ஆலய வளாகத்தில் நடந்தது. பரமக்குடி பங்குத்தந்தை பிரபாகரன் வரவேற்றார். சூராணம் பங்குத்தந்தை ஜெரால்டுஜோசப் தலைமை வகித்தார். உதவி பங்குத்தந்தை பாசில், சிவகங்கை செயலாளர் சவரிமுத்து, இணைசெயலாளர் ஜஸ்டின்திரவியம், தாமஸ்பரிபாலன் ஆகியோர் கூட்டுச்சிறப்பு திருப்பலி, வழிபாடுகளையும் நடத்தினர். திருப்பலிக்குப் பின் தூய பதுவை அந்தோணியார் தேர் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதி வழியாக ஆலயத்தை அடைந்தது. இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !