அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் 24ல் விழா
ADDED :4497 days ago
ராசிபுரம்: ராசிபுரம், அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளதை தொடர்ந்து, நான்காம் ஆண்டு துவக்க விழா, ஜூன், 24ம் தேதி நடக்கிறது. அன்று காலை, ஏழு மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு திருமஞ்சன அபிஷேகம், உலக நன்மை வேண்டி சிறப்பு ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவர் மஹா திருமஞ்சன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும், கூட்டு பிராத்தனையும் நடக்கிறது. காலை, 10 மணிக்கு அலங்கார மங்கள ஆர்த்தி, தீபாரதனையும் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, கோவில் அருகில் உள்ள வாசவி மகாலில் குழந்தைகளின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8 மணிக்கு ஆஞ்சநேயர் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை, அபயஹஸ்த ஆஞ்சநேய பக்த ஜன சபா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.