உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூரி கோவிலில் எப் எம் ரேடிய‌ோ சே‌வை!

பூரி கோவிலில் எப் எம் ரேடிய‌ோ சே‌வை!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான பூரி ஜெகந்தார் கோவில் சார்பில் எப் எம் ரேடிய‌ோ சே‌வையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட உள்ள இந்தரேடியோ மூலம் கலாச்சாரம் , பக்தி பாடல்கள், கோவிலின்‌ பெருமைகள் குறித்து ஒலிபரப்பு செய்யப்படும், தினமும் எட்டு மணி நேரம் இயங்கும் இந்த ரேடி‌யோவில் காலையி்ல் நான்கு மணி நேரமும், மாலையில் நான்கு மணி நேரமும் ஒலிபரப்பு செய்யப்படும் என கோவில் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒலிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவில் சார்பாக இணையதள வசதி இருப்பினும் வரும் காலங்களில் பேஸ் புக், டுவிட்டர் போன்ற வசதிகளையும் விரைவில் துவக்கப்படு்ம் என கோவில் நிர்வாக தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !