உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழனி அம்மன் கோவிலில்மழை வேண்டி பால்குட ஊர்வலம்

செங்கழனி அம்மன் கோவிலில்மழை வேண்டி பால்குட ஊர்வலம்

காட்டாங்கொளத்தூர்:கருநிலம், செங்கழனி அம்மன் கோவில் திருவிழாவில், மழைவேண்டி, கிராம பெண்கள், 108 பால்குடம் எடுத்து, சிறப்பு அபிஷேகம் செய்தனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருநிலம் ஊராட்சியில், செங்கழனி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆனி மாத கூழ்வார்த்தல் திருவிழா  ஜூன், 21 துவங்கியது. இதில், ஊராட்சி தலைவர் பத்மபிரியா ரமேஷ் தலைமையில், ஏராளமான கிராம பெண்கள், மழை வேண்டி, 108 பால்குடம் எடுத்தனர். காலை 10:00 மணிக்கு, துவங்கியபால்குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தது. பின்னர், செங்கழனி அம்மன் மற்றும் ஒசூர் அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !