கல் பரதேசி கோவிலில் குரு பூஜை சிறப்பு வழிபாடு
ADDED :4598 days ago
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கல்பரதேசி கோவிலில் குரு பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் அனுஷம் நட்சத்திர தினத்தன்று உளுந்தூர்பேட்டையில் சங்கரலிங்க சுவாமிக்கு குருபூஜை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு கல்பரதேசி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஜூன், 21 காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வரபூஜையுடன் விழா துவங்கியது. 10:00 மணிக்கு நவக்கிரக ஹோமம், 11:00 மணிக்கு அதிருத்ரமகாயாகம், 11:30 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், மதியம் 12:00 மணிக்கு மகேசுவர பூஜை, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சுரேஷ்நரேந்தர் சுவாமி மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.