70 ஆயிரம் பேர் அமர்நாத் தரிசனம்!
ADDED :4684 days ago
ஜம்மு: கடந்த, 28ம் தேதி துவங்கிய, அமர்நாத் யாத்திரையில், நேற்று மாலை வரை, 70 ஆயிரம் பக்தர்கள், இயற்கையாக உருவான பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். ஜம்முவிலிருந்து நேற்று காலை, 2,000 பயணிகள், அமர்நாத் புறப்பட்டனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புனித யாத்திரை, அடுத்த மாதம், 21ம் தேதி நிறைவடைகிறது.