உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை!

கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை!

பெ.நா.பாளையம்: கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை, என, சென்னை சாய்ராம் வாசுதேவன் பேசினார். வடமதுரை ஈஸ்வரா நகர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் மற்றும் ஈஸ்வரா நகர் நல்வாழ்வு சங்கம் ஆகியன இணைந்து, "18வது ஸ்ரீ சத்ய சாயி சப்தாஹ தேவாம்ருதம் என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. இந்நிகழ்ச்சியில் சென்னை சாய்ராம் வாசுதேவன் "சரணாகதி தத்துவம் என்ற தலைப்பில் பேசியதாவது: இந்த உலகில் உள்ள அனைத்து உறவுகளும் நிரந்தரமானதல்ல; கடவுள் ஒருவரே நிரந்தரமானவர். நம்முடைய உடலில் சிவம் என்ற பக்தி இல்லை என்றால், நாம் வெறும் சவம். கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கை. மனது அமைதி பெற, பஜனை செய்வது நல்லது. சரணாகதி தத்துவமே நம்மை இறைவனிடம் அழைத்து செல்லும். கடவுளுக்கு பிடித்த செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். அவருக்கு பிடிக்காத செயல்களை செய்யக் கூடாது. அவர் மேல் முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். அவரையே வழியாகவும், இலக்காகவும் கொள்ள வேண்டும். அவரை எப்போதும் மனதில் நினைத்து போற்ற வேண்டும். நல்லது, கெட்டது எது கொடுத்தாலும் நமக்கு நல்லதையே கொடுப்பவர் கடவுள் ஒருவர் மட்டுமே. கடவுள் நினைப்பதை, நாம் செய்ய வேண்டும். நாம் செய்வது கடவுள் நினைத்தது ஆக இருக்க வேண்டும். இவ்வாறு, சாய்ராம் வாசுதேவன் பேசினார். இன்று(5ம் தேதி) மாலை 5.30 மணிக்கு, ""கடவுளின் சம்பந்தமே மகிழ்ச்சி தரும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !