ராமர் பாலத்தை பாதுகாக்க அக்னி தீர்த்த கடலில் சபதம்!
ADDED :4557 days ago
ராமேஸ்வரம்: ராமர் பாலத்தை பாதுகாக்க, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், அகில பாரத இந்து மகாசபா அமைப்பினர், தீபம் ஏற்றி சபதம் செய்தனர். ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் ராமர் பாலம் பாதுகாப்பு குறித்தகருத்தரங்கம் நடந்தது. பின், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் தலைமையில், இந்து மகாசபையினர்ஊர்வலமாக சென்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சங்கல்ப பூஜை செய்தனர். ராமர் பாலத்தை பாதுகாக்க, சபதம் செய்து, தீபம் ஏற்றி கடலில்விட்டனர். மாநில இந்து மகாசபா பொருளாளர் ராகவன், மாநில சிவசேனா நிர்வாகி தங்கமுத்து கிருஷணன், இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகிகள் நாகேந்திரன், சரவணன் பங்கேற்றனர்.