உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் கோவிலில் திருவாதிரை அபிஷேகம்

ராமானுஜர் கோவிலில் திருவாதிரை அபிஷேகம்

காஞ்சிபுரம்: செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், திருவாதிரையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் உபகோவிலாக, செவிலிமேடு ராமானுஜர் கோவில் உள்ளது. மூலவர், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதந்தோறும் திருவாதிரையில், திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன்படி, நேற்று ஆனித் திருவாதிரையை முன்னிட்டு, காலை 6:00மணிக்கு, பக்தர்கள் அங்கபிரதட்சணமும், காலை 10:30 மணிக்கு, திருமஞ்சனமும், மூலவர் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேகத்திற்கு, ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !