ஐகோர்ட் தலைமை நீதிபதி நடராஜர் கோவிலில் தரிசனம்
ADDED :4497 days ago
சிதம்பரம்: சென்னை, ஐகோர்ட் தலைமை நீதிபதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்தார். புதுச்சேரி ஆளுனர் வீரேந்திர கட்டாரியா பதவியேற்பு விழாவில் பங்கேற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி ரஜேஷ் அகர்வால், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை கலெக்டர் கிர்லோஷ்குமார், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருக்கு பொது தீட்சிதர்கள் பூர்ணகும்ப மரியாதை வழங்கி, கோவிலுக்கு அழைத்து சென்றனர். ரத்தினசபாதிக்கு நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையை நடராஜர் சன்னதியில் இருந்து தரிசனம் செய்தார். பின்னர் சபாநாயகர் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற நீதிபதிக்கு, பொது தீட்சிதர்கள் பரிவட்டம் கட்டி சிறப்பு மரியாதை செலுத்தினர். கலெக்டர் கிர்லோஷ்குமார், சப் கலெக்டர் (பொறுப்பு) பாதாளம், தாசில்தார் விஜயா, டி.எஸ்.பி., ராஜாராம் உடனிருந்தனர்.