தனுசு: பிள்ளைகளால் பெருமை!
அம்பு போல் இலக்கை நோக்கி செல்லும் தனுசு ராசி அன்பர்களே!
சுக்கிரன்,குருபகவான், சனி,ராகு மாதம் முழுவதும் நன்மை தரும் இடத்தில் உள்ளனர். புதன் ஜூலை30 மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறி நற்பலன் கொடுப்பார். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். வரவுசெலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். ஜூலை30 க்கு பிறகு முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. ஆகஸ்ட் 8,9 தேதிகளில் வயிறு தொடர்பான பிரச்னை வரலாம். வீட்டுச் செலவுக்குத் தேவையான பணவசதி கிடைக்கும். ஜூலை30 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகும். ஆகஸ்ட்3,4,5 தேதிகளில் பெண்களால் நன்மை உண்டு. ஜூலை25,26 தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.பணியாளர்கள் பணியிடத்தில் சிறப்பான நிலை காண்பர். பணிச்சுமை குறையும். ஆகஸ்ட் 10,11,12 தேதிகளில் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருப்பது நல்லது. தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். ஜூலை18,19,20,23,24 தேதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூலை21,22 தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும்.கலைஞர்களுக்கு பெண்களின் ஆதரவு கிடைக்கும். விருது பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகளுக்கு நற்பெயரோடு நல்ல பதவியும் கிடைக்கலாம். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். ஜூலை30 வரை போட்டிகளில் வெற்றி காண்பது சிரமம்.விவசாயிகள் சீரான மகசூலை பெறுவர். நெல், சோளம் போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடைகளால் பெரிய வருமானம் இருக்காது. பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
நல்ல நாட்கள்: ஜூலை17,21,22,25,26,ஆகஸ்ட்1,2,3, 4,5,10,11,12,13,14
கவனநாள்: ஆகஸ்ட் 6,7 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்டஎண்: 4,6,7 நிறம்:வெள்ளை, மஞ்சள் சிவப்பு
வழிபாடு: தினமும் சூரிய தரிசனம் செய்யுங்கள். குலதெய்வத்தையும், முருகனையும் வழிபட தவறாதீர்கள். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுங்கள். நன்மை அதிகரிக்கும்.