பழநியில் ஆடி லட்சார்ச்சனை ஜூலை 17ல் துவக்கம்!
ADDED :4517 days ago
பழநி: உலக நலனுக்காக, பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை நடக்கிறது. முதல் நாளான, ஜூலை 17 மாலை 6 மணிக்கு சிவன், விநாயகரிடம் அனுமதி பெறுதல், பெரியநாயகிம்மன் சன்னதியில் சங்கல்பம் நடைபெறும். தினமும் மாலை 6.30 மணிக்கு மேல் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டுகிறது. விழா நிறைவு நாளான ஆக.16ல் லட்சார்ச்சனை, ஹோமம், சுமங்கலி பூஜை, மகா அபிஷேகம், தங்ககவச அலங்காரம் செய்யப் படும். பழநிகோயில் இணைக்கமிஷனர்(பொ) ராஜமாணிக்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.