மனம் பொறி வழி போகாது நிற்றல் பொருட்டு, உணவை விடுத்தேனும் கருக்கியேனும்- மனம் வாக்கு. காயம் என்ற மூன்றினாலும் நெறிப்படி கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதம் எனப்படுகிறது. அவ்வாறு விரதம் இருக்கும் போது ஒருவேளை மட்டும் சாப்பிட வேண்டும். காலையும் மாலையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாவிட்டால், காலையும் இரவும் பழங்கள் சாப்பிடலாம். சிலர் இதற்காக "டிபன் சாப்பிடவும் செய்வர். டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது என்பதை வேடிக்கையாக சொல்வதுண்டு. விரதத்தன்று காலை, இரவில் "பல் ஆகார்(பழ உணவு) சாப்பிடலாம் என்பதே "பலகாரம் என்று மாறி இறுதியில் இட்லி, தோசையாகி விட்டது என்பார்கள்.
சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள், வியாதியினால் மருந்து உண்பவர்கள், கர்ப்பிணிகள், சன்யாசிகள் உண்ணா விரதம் இருக்க தேவையில்லை என தர்ம சாஸ்திரம் கூறுகிறது.