திருமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4515 days ago
உசிலம்பட்டி: உசிலம்பட்டி - தேனி ரோட்டில் உள்ள திருமுருகன் கோயில், புதிய ராஜகோபுரத்திற்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 11ல் துவங்கியது. நேற்று காலை காலை 9.34 க்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பரிவார தெய்வங்கள், திருமுருகனுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அகிலரசு பட்டர், பழனி பாடசாலை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் குருக்கள், கோயில் பட்டர்கள் சதாசிவம், பாலசுப்பிரமணியன் குழுவினர்கள் செய்தனர். அறங்காவலர் குழுவினர், திருப்பணிக்குழுவினர், பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.